கடைசி நேரத்தில் சரத்குமாருக்கு குட்பை சொல்லி திமுக-வில் இணைந்த சமக வேட்பாளர்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து 40 தொகுதியில் போட்டியிடுகிறது.

 • Share this:
  திருச்சி லால்குடி சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் முரளிகிருஷ்ணன் திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேருவை சந்தித்து இன்று திமுகவில் இணைந்தார்.

  திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி  வேட்பாளராக தமிழ் மாநில கட்சி சேர்ந்த தர்மராஜ் போட்டியிடுகிறார். அதேபோன்று லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தற்போதும் போட்டியிடுகிறார். அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த விஜயமூர்த்தி போட்டியிடுகின்றார்.

  லால்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெற்றதால் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மராஜ் போட்டியிடுகிறார் இரண்டு முறை வெற்றி பெற்றதால் பலம் வாய்ந்த மூன்றாவது முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக தொண்டர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து 40 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளராக உள்ள பெட்டவாய்த்தலை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

  இந்நிலையில் இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என் நேருவை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  இந்த நிகழ்வின் போது திமுக சட்டமன்ற உறுப்பினரும் லால்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சௌந்தரபாண்டியன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி கலந்து கொண்டனர்.
  சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர் திமுகவில் இணைந்து மேலும் திமுகவை பலப்படுத்தும் விதமாக திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முரளி கிருஷ்ணன் சமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுக்களை இன்று வாபஸ் பெற கடைசி நாள் என்ற நிலையில் தனது வேட்புமனுவை முரளி கிருஷ்ணன் வாபஸ் பெற்றுள்ளார்.

  சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக இருந்தவர், இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. மூன்று முறை கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

  சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளி கிருஷ்ணன் திமுகவில் இணைந்ததால் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்களும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய கட்சியை சேர்ந்த தொண்டர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: