திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் - திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் - திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வாக்குறுதி

மகளிர் மேம்பட்டுக்காகன பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது.

  • Share this:
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்  என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு மார்ச் 14-ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதே இடத்தில் பிரம்மாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மார்ச் 7-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சுமார் 750 ஏக்கரில் சிறுகனூர் மைதானம் முழுவதும் திமுக கொடி கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் நடப்பட்டுள்ளது.

திருச்சி சிறுகனூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செய்து தரப்படும் என்றார். தமிழகத்தின் 7 முக்கிய துறைகளை வளர்ப்பதே திமுக ஆட்சியின் நோக்கம். அதன்படி பொருளாதராம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி துறைகளை வளர்த்தெடுப்பதே திமுக-வின் முதல் பொறுப்பாக இருக்கும் என்றார்.

மேலும் மகளிர் மேம்பட்டுக்காகன பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
Published by:Vijay R
First published: