தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சமூக ஆர்வலர் ராசகுமார் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ஆதரவற்று இறந்த 125 பேரின் உடல்களை உரிய சடங்குகளோடு நல்லடக்கம் செய்துள்ளார். இவர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் நேற்று தாக்கல் செய்தார்.
முன்னதாக காரைக்குடி சந்தைப்பேட்டை இடுகாட்டில் உள்ள இறந்தவர்களின் சமாதிகளில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக தேவக்கோட்டை சென்றார். காரில் இருந்து காரைக்குடி சாலையில் இறங்கிய ராசகுமார் ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக சென்றார். சாலையில் உள்ள குப்பைகளை அகற்றியபடியே சென்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்தரனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
செய்தியாளர்: முத்துராமலிங்கம்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.