100 சதவிகித வாக்குப்பதிவு - நெல்லையில் நெற்பயிரில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட நிர்வாகம்

தேர்தல் விழிப்புணர்வு

கொரோனா ஊரடங்கு இருப்பதால் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அமைக்கும் முறை அமல்படுத்தபட்டுள்ளது.

  • Share this:
நெல்லை மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி  அம்பாசமுத்திரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் விளைந்த  பூமியில்  வயலில் வைத்து நெல் அறுவடையில் 100 சதவீதம் என கதிர்களை அமைத்து  வயல்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொதுமக்கள் விவசாயிகளை வெகுவாக கவர்ந்தது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்திட இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது பல்வேறு குறும்படங்களும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  நெல்லை மாவட்டத்தில் கடந்த 2016 தேர்தலின் போது தோல் பாவை கூத்து கலைஞர்களை கொண்டு விழிப்புணவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அழிவின் விளிம்பிற்கு சென்ற அந்த கலைஞர்கள் காப்பற்றப்பட்டதுடன் மக்கள்  பெரிதும் ரசித்த விஷயமாக இது அமைந்தது.  இதன்மூலம் கலைஞர்களுக்கு   வருமானமும் கிடைத்தது.  தற்போது 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி , மகளிர் சுய உதவி குழுக்கள் பேரணி , கோலப்போட்டி என பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் விழிப்புணர்வு


கொரோனா ஊரடங்கு இருப்பதால் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அமைக்கும் முறை அமல்படுத்தபட்டுள்ளது. ஆனாலும் 70 முதல் 75 சதவீத வாக்குகள் தான் பதிவாகிறது படிக்காத மக்களை விட படித்த மக்கள் அதிகம் பேர் வாக்களிக்க  வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.  இந்த நிலையில் பொதுமக்களை கவரும் வகையில்  நெல் விளையும் பூமியான அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முயற்சியில் மாவட்ட நிர்வாகம்  இறங்கியது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார் சேரன்மகாதேவி கோட்டாட்சியர்.  நெல் அறுவடை நடக்கும் வயலில் நெற் கதிர் செடிகளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி  100 சதவிகித வாக்குப்பதிவு  என்பது போன்று சுற்றியுள்ள நெல் கதிர்களை மட்டும் அறுவடை செய்து 100% ஓட்டு என ஆங்கிலத்தில் இருப்பது போன்று அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும்  கழுகுபார்வையில் பிரத்தியேக காட்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதே வயல் பகுதியில் வைத்து சேரன்மகாதேவி கோட்டாட்சியர் பிரக்திக்தயாள் தலைமையில் வயலில் வேலைபார்த்த விவசாயிகள் , அப்பகுதி பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம் வைத்து வாக்களிப்பது குறித்தும் ,  வாக்களிப்பது கடமை என்பதை வலியுறுத்தும் விதமாகவும்100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும்  செயல் முறை விளக்கத்துடன்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வழக்கமான ஊருக்கு  நடுவில் பெரிய பலூனை பறக்க விடுவது போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் 100 சதவீத வாக்குபதிவு சிறப்பு காட்சிகள் கழுகுப்பார்வையில் வெளியிடப்பட்டுள்ளது விவசாயிகள் , பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Published by:Ramprasath H
First published: