விளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி போட்டி - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி போட்டி - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கே.எஸ்.அழகிரி

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. விளவங்கோட்டில் விஜயதாரணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏபரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை  தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்நிலையில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

  காங்கிரஸ் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்

  விளவங்கோடு - விஜயதரணி
  வேளச்சேரி - J.M.H.ஹாசன்
  மயிலாடுதுறை -S.ராஜ் குமார்
  குளச்சல் - J.G.ப்ரின்ஸ்
  Published by:Ramprasath H
  First published: