அனிதா குறித்து நான் ட்வீட் செய்யவில்லை- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

அனிதா குறித்து நான் ட்வீட் செய்யவில்லை- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மாபா பாண்டியராஜன்

எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது மாணவி அனிதாவின் மரணம். அனிதாவின் ஆன்மா பேசுவதுபோல சித்தரித்து ஒரு வீடியோ தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் கணக்கில் பதிவாகியிருந்தது.

  'மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தும் நீட் தேர்வை தி.மு.க கொண்டுவந்தது என்பது போலவும் அனிதாவின் ஆன்மா பேசுவதுபோல வீடியோவில் குரல் உள்ளது’. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த வீடியோ அமைச்சரின் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது.

  இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். “ அன்பார்ந்த நண்பர்களே, இன்று காலை எனது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து நீட் பற்றி ஒரு ட்வீட் போடப்பட்டுள்ளது. அந்த ட்வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனது அனுமதியின்றி ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எப்படி வந்தது எனக் கண்டறிந்த இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.


  சைபர் க்ரைமில் இதுகுறித்து புகார் அளிக்கப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. இந்த பதிவு செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: