• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • TN Election Result 2021 : ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு பின்னடைவு

TN Election Result 2021 : ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு பின்னடைவு

குஷ்பு

குஷ்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    தமிழகம் சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்கு எண்ணிக்கை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 88 தொகுதிகளிலும் அதிமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.

    தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    தபால் வாக்குகளை பொறுத்தவரை 5,64,253 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இவைகள் எண்ணப்படுவதற்கு 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டுள்ளது.

    தபால் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில், ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடவை சந்தித்துள்ளார்.

    தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவை சந்தித்துள்ளார்.

    கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் காசிலிலங்கம் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் ஜெயசீலன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் முன்னிலையிலும் பாஜக வேட்பாளர் போஜராஜன் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்.ஷ

    மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலையிலும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னடைவையும் சந்தித்துள்ளனர்.

    ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர ராமசந்திரன் முன்னிலையில் உள்ளார்.

    கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: