திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தொல்.திருமாவளவன்

சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிகள் 4 தனி தொகுதிகளிலும், 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

  • Share this:
    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்ட்டிருந்தது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை தொடர்ந்து தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக - விசிக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து தொகுதிகள் உறுதி செய்யப்பட்டன.

    விசிக போட்டியிடும் தொகுதிகள்

    வானூர் (தனி)
    காட்டுமன்னார்கோவில்(தனி)
    செய்யூர் (தனி)
    அரக்கோணம் (தனி)
    நாகப்பட்டினம்
    திருப்போரூர்

    சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிகள் 4 தனி தொகுதிகளிலும், 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
    Published by:Vijay R
    First published: