அரசியலில் மு.க.ஸ்டாலின் நல்லக்குழந்தை... முதல்வர் பழனிசாமி கள்ளக்குழந்தை - ஆ.ராசா விமர்சனம்

அரசியலில் மு.க.ஸ்டாலின் நல்லக்குழந்தை... முதல்வர் பழனிசாமி கள்ளக்குழந்தை - ஆ.ராசா விமர்சனம்

ஆ.ராசா எம்.பி.

பெண்ணு பார்த்து நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி. முதலிரவு நடத்தி பத்து மாதம் கடந்து பிறந்த சுகபிரசவம் அரசியலில் ஸ்டாலின் .

  • Share this:
    அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சியான மதிமுக வேட்பாளர் சின்னப்பா போட்டியிடுகின்றார். கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டமும்,செயல் வீரர் கூட்டம்‌ அரியலூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் போட்டி என கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அரசியல் பரிமானத்தில் ஸ்டாலின் வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆட்சியிலும் அதிகாரத்திலும் படிப்படியாக வளர்ந்து வந்தார்.

    ஆட்சியிலே முறையான வளர்ச்சி முறையான பரிமானம், கட்சியிலே முறையான பரிமானம்இ எனவே தான் மிக ஆரோக்கியமான குழந்தை அரசியல் குழந்தை, பெண்ணு பார்த்து நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி. முதலிரவு நடத்தி பத்து மாதம் கடந்து பிறந்த சுகபிரசவம் அரசியலில் ஸ்டாலின் .

    ஆனால் எடப்பாடி பழனிசாமி திருட்டு தனமாக வந்த கள்ளக்குழந்தை. குறைமாத குழந்தை எனவே இருவருக்கும் போட்டி என்பது நம்மாள் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஜெயலலிதா ஆட்சி என கூறும் எடப்பாடி நீட், ஜிஎஸ்டி நிலுவை தொகை மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இலவச மின்சாரம் எப்பவும் கட் ஆகலாம் என்னும் நிலையுள்ளது.மாநில உரிமை தமிழர் நலம் என்று சொன்னால் ஜெயலலிதா ஆட்சி இல்லை.

    இப்ப ஏன் எடப்பாடி ஜெயலலிதா ஆட்சி அமைப்பேன் என்று சொன்னால் அகில உலகத்திலேயே ஊழல் செய்து சிறைக்கு சென்றவர் ஜெயலலிதா.

    இவ்வாறு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தததை அனைத்தையும் விட்டு கொடுத்தவர் பழனிசாமி தற்போது ஜெயா ஆட்சியில் இருக்கும் ஊழலை மட்டுமே கொள்ளை அடிக்கும் செயலை தான் செய்கிறார் எடப்பாடி என பேசினார்.
    Published by:Vijay R
    First published: