• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • மே2 காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - தேர்தல் ஆணையம்

மே2 காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - தேர்தல் ஆணையம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு

  • Share this:
    தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை குறித்த முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

    இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது, வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், எந்தனை பேரை அதற்கான அனுமதிப்பது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    முன்னதாக, காலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ, மே 2 காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கும் என்றும், முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவித்தது. வாக்கு எண்ணும் மையங்களில் ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்படும் என்றும் பெரிய தொகுதி என்றால் 30 மேஜைகள் வரை போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்றார். வாக்கு எண்ணும் மையங்கள் தொடர்பாக புகார் கொடுத்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.ஆனால் முகாந்திரத்துடன் கூடிய புகார்கள் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தார். வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற லாரிக்குள் பெண் காவலர்களுக்காக தற்காலிக கழிப்பறைதான் கொண்டு செல்லப்பட்டதாக சாஹூ தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: