எம்.ஜி.ஆர் கெட்டப் போட்ட தந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை பெண் வேட்பாளர்

எம்.ஜி.ஆர் கெட்டப் போட்ட தந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை பெண் வேட்பாளர்

பல முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பியும் இதுவரை அவருக்கு அதிமுக வாய்ப்பளிக்கவில்லை என கூறப்படுகிறது.

  • Share this:
    ஒசூரில் சுயேட்சை பெண் வேட்பாளர் கீதா எம்.ஜி.ஆர் கெட்டப் போட்ட தனது தந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னைய்யா(61). எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் அவரை போலவே மேடம் அணிந்து அதிமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் எம்ஜிஆர் சின்னய்யா என ஒசூர் சுற்றுப்பகுதி மக்களால் பரவலாக அறியப்பட்டு வருகிறார்.

    அதிமுகவின் ஆரம்பகால தொண்டராக இருந்து வரும் சின்னய்யா, தேர்தல் பிரச்சாரங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்க கூடியவராக இருந்தாலும், பல முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பியும் இதுவரை அவருக்கு அதிமுக வாய்ப்பளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    அதிமுக தலைமை மீது விசுவாசம் கொண்ட இவர், உள்ளாட்சி தேர்தலில் கூட சீட் கிடைப்பதில்லை என்கிற விரக்தியில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தனது மகள் கீதா என்பவரை சுயேட்ச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்ய வைத்தார்.

    மகளுடன் சின்னய்யா, எம்ஜிஆர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒளிவிளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தாணுங்க என்கிற எம்ஜிஆரின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டது போலிசார், தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோரையும் ஷசிரிப்பில் ஆழ்த்தியது.
    Published by:Vijay R
    First published: