ஒபாமாவிற்கு பிறகு ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன் - வைகோ புகழாரம்

வைகோ

ஒபாமா மாதம் இருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். அதன்பிறகு ஸ்டாலினை தான் அவ்வாறு பார்க்கிறேன்.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொளத்தூர் தொகுதியிலிருந்து தொடங்கினார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் ஐந்து முழக்கங்கள், அண்ணா மக்களிடம் சென்று சொல்லுங்கள் என சொன்னதை போல முழங்கியிருக்கிறார். ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்த போதுதான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இந்தியாவில் இது போன்ற திட்டம் வேறெங்கும் நடக்கவில்லை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இரவு நான் போய் பார்த்தேன். அவர்களுடன் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் அது மிகவும் வேதனையான ஒன்று.
13 பேரை காவல்துறையை விட்டு ஏவி துட்டுக்கொண்ற கொலைகார அரசு எடப்பாடி அரசு என விமர்ச்சனம் செய்தார்.

மேலும் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் கொன்ற கொலைக்கார அரசு எனவும் சாத்தான்குள சம்பவத்தை நினைவுபடுத்தினார். பொள்ளாட்சி பாலியல் குற்றம் மூலம் தமிழகத்தின் பெண்கள் நிலையை குறித்து கடுமையாக விமர்ச்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய வைகோ, ஒபாமா மாதம் இருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். அதன்பிறகு ஸ்டாலினை தான் அவ்வாறு பார்க்கிறேன். கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர்களும் தான் வேட்பாளர் என்று பெருமைபடும் அளவிற்கு தொகுதியில் உழைத்துள்ளார்.

திருமண ஆன சில நாட்களில் சிறை சென்று தொழுநோயாளிகள் அடைக்கப்பட்ட சிறையில் அடைத்து சித்தரவதை செய்யப்பட்டு அத்தனை கொடுமைகளையும் கடந்து உங்களுக்காக திமுகவின் தலைவராக உருவெடுத்திருகிறார் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
Published by:Vijay R
First published: