• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

ஜி.கே.வாசன் - முதல்வர் பழனிசாமி

ஜி.கே.வாசன் - முதல்வர் பழனிசாமி

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை கேட்டு வந்தது. அதிமுக தரப்பு 6 தொகுதிகளை தருவதாக கூறிவந்தன

  • Share this:
    அ.தி.மு.க கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் நேற்று அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதேபோல் கூட்டணியில் உள்ள பா.ம.க, பா.ஜ.க, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சிபாரதம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

    அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை கேட்டு வந்தது. அதிமுக தரப்பு 6 தொகுதிகளை தருவதாக கூறிவந்தன. ‘தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அ.தி.மு.க ஏற்கும் என்று நம்புகிறோம். அது கிடைக்கும் வரை எங்கள் பேச்சு வார்த்தை தொடரும்’ என ஜி.கே.வாசன் தெரிவித்தார்

    அதன்படி அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: