ஆண்டு வருமானத்தை திருத்தம் செய்து மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்த சீமான்... இப்போ எவ்வளவு தெரியுமா?

ஆண்டு வருமானத்தை திருத்தம் செய்து மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்த சீமான்... இப்போ எவ்வளவு தெரியுமா?

சீமான்

புதிய வேட்புமனுவில், ஒவ்வோர் ஆண்டும் 4 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருமானம் காட்டப்பட்டுள்ளது

  • Share this:
    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனுவில், ஆண்டு வருமானத்தில் பிழை இருந்த நிலையில், அதனை திருத்தி, புதிய வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

    சீமான் முன்பு தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், 5 ஆண்டுகளுக்கான வருமானம் 66,000 என கூறப்பட்டிருந்தது. தற்போது 5 ஆண்டு வருமானம், 22,21,670 என உயர்ந்துள்ளது. முந்தைய வேட்புமனுவில் 2015-16-ல் சுமார் 30,000 ரூபாய், அதன்பின்னர் 3 ஆண்டுகள் பத்தாயிரம் ரூபாய் என்ற அளவில் வருமானம் காட்டிருந்தார்.

    புதிய வேட்புமனுவில், ஒவ்வோர் ஆண்டும் 4 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருமானம் காட்டப்பட்டுள்ளது. 2019-2020-ல் 1000  ரூபாய் மட்டுமே வருமானம் என கூறியிருந்த நிலையில், தற்போது அது, 4,72,900 ரூபாய் என திருத்தப்பட்டுள்ளது.

    இதேபோன்று முந்தைய வேட்புமனுவில், சீமான் அவரது மனைவியின் 5 ஆண்டு வருமானம் 92,795 ரூபாய் என முன்பு குறிப்பிட்டிருந்தார். தற்போது, 18,36,730 ரூபாய் என உயர்த்தி கூறப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வருமானம் இல்லை என முன்பு குறிப்பிட்ட நிலையில், தற்போது லட்சங்களில் வருமானம் காண்பிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published: