வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வாக்குப்பதிவு

வாக்காளர்களுக்கு மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தண்டோரா அடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னை வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி 92ல் மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று வேளச்சேரி தொகுதியில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக, வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, மறுவாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து அறிவிப்பு ஆணையை வேட்பாளர்களுக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார். இந்த வாக்குச்சாவடியில் 548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்களுக்கு மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தண்டோரா அடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக குறிப்பிட்ட பகுதியில் இரண்டு பறக்கும் படையினர் கண்கானிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு வாக்குப்பதிவை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் தான் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
    Published by:Ramprasath H
    First published: