ஓபிஎஸ் சொத்துமதிப்பு 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?

ஓபிஎஸ் சொத்துமதிப்பு 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

கடந்த ஆண்டுகளுக்கு முன் ரூ.1.53 கோடியாக இருந்த சொத்துமதிப்பு தற்போது ரூ.7.83 கோடியாக உயர்ந்துள்ளது.

 • Share this:
  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. வேட்புமனு பிரமாண பத்திரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது சொத்துமதிப்பு விவரத்தை தாக்கல் செய்துள்ளார்.

  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துமதிப்பை ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.  அதில் கடந்த ஆண்டுகளுக்கு முன் ரூ.1.53 கோடியாக இருந்த சொத்துமதிப்பு தற்போது ரூ.7.83 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் அசையும் சொத்து ரூ.5.19 கோடி, அசையா சொத்து ரூ.2.64 கோடி மற்றும் கடன் ரூ.272 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு ரூ. 25 லட்சமாக இருந்த கடன்தொகை தற்போது ரூ.272 கோடியாக அதிகரித்துள்ளது.
  Published by:Vijay R
  First published:

  சிறந்த கதைகள்