• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • தமிழக தேர்தல் 2021 - வேட்புமனு பரிசீலனை பணிகள் விறுவிறு

தமிழக தேர்தல் 2021 - வேட்புமனு பரிசீலனை பணிகள் விறுவிறு

வேட்புமனு (மாதிரி படம்)

வேட்புமனு (மாதிரி படம்)

திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலை 3 மணியளவில் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடந்து வருகிறது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வேட்புமனுக்கள் தடை செய்யப்படும். இதனை தொடர்ந்து தகுதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும்

    அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார்; எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர். பரிசீலனைக்கு பின்னர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

    சைதாப்பேட்டையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என புகார் எழுந்ததையடுத்து அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற வேட்பாளர்களின் மனுவை பரிசீலித்த பின்னர் இறுதியாக இவரது வேட்புமனு மீது முடிவு எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதிவேந்தனின் வேட்புமனு நிறுத்திவைப்பு. நாமக்கல்,ராசிபுரம் என இரண்டு இடங்களில் மதிவேந்தன் ஓட்டுநர் உரிமம் இருப்பதால் அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஓட்டுநர் உரிமத்தில் ஒன்றை நீக்கிவிட்டு அதற்கான ஆவணங்களை சமர்பிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: