Exclusive : பாஜகவில் இணைந்ததற்காக அதிகம் வாழ்த்து தெரிவித்தது திமுக-வினர் தான் : ரகசியம் உடைத்த எம்.எல்.ஏ சரவணன்

Exclusive : பாஜகவில் இணைந்ததற்காக அதிகம் வாழ்த்து தெரிவித்தது திமுக-வினர் தான் : ரகசியம் உடைத்த எம்.எல்.ஏ சரவணன்

எம்.எல்.ஏ சரவணன்

என்னுடைய வெற்றி நிச்சயிக்கப்பட்ட வெற்றி .மக்களிடம் பரவலாக வரவேற்பு உள்ளது.

  • Share this:
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ வாக இருந்த டாக்டர் சரவணன் சீட் கிடைக்காத காரணத்தால், பாஜகவில் இணைந்த 4 மணி நேரத்தில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்த அதிரடி மாற்றங்கள் மற்றும் அதை சுற்றி நிகழும் அரசியல் நகர்வுகள் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் பிரத்தியேகப் பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர் : மதிமுக - பாஜக - திமுக... மீண்டும் பாஜக... திடீரென பாஜகவிற்கு மாறிய 4 மணி நேரத்தில் போட்டியிடும் வாய்ப்பு... இந்த அதிரடி மாற்றங்களுக்கு என்ன காரணம்?

மருத்துவர் சரவணன்  : அடிப்படையில் நான் ஒரு மருத்துவர், சமூக ஆர்வலர். கூடுதலாக சேவையாற்றும் ஒரு வாய்ப்பாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தினேன்.சட்டமன்ற உறுப்பினர் நிதியை தாண்டி நிறைய செய்திருக்கிறேன். இந்த நிலையில், எனக்கு சீட் மறுக்கப்பட்டது. நான் சுயேட்சையாக நிற்க வேண்டும் என்று கூட மக்களிடமிருந்து கோரிக்கை வந்தது.பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்தது, எனக்கான சுதந்திரமும் இருந்தது. எனவே அங்கு இணைந்தேன். மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தாமரை உறுதியாக மலரும்.

செய்தியாளர் :  மருத்துவர், சமூக சேவகர் என்ற அடையாளங்கள் போதும் என்றால் சுயேட்சையாக நின்று இருக்கலாமே?

மருத்துவர் சரவணன்  : சுயேச்சையாக நின்று இருந்தால் வெற்றி இலக்கைத் தொட முடியாது. நிறைய வாக்குகளை வாங்கலாம் ஆனால் வெற்றி இலக்கைத் தொட முடியுமா என்பது சந்தேகமே.மேலும், கொரோனா நோய் தொற்றுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கொண்டு வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதெல்லாம் என்னை நெகிழ செய்தது. அதனாலே பாஜகவில் இணைந்தேன்.

செய்தியாளர் :  உங்களுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணமானவர் என கூறப்படும் நபரை எதிர்த்து களம் காண்கிறீர்கள், வாய்ப்பு எப்படி உள்ளது?

மருத்துவர் சரவணன்  : என்னுடைய வெற்றி நிச்சயிக்கப்பட்ட வெற்றி .மக்களிடம் பரவலாக வரவேற்பு உள்ளது.

செய்தியாளர் :  திமுகவில் சீட் தராததற்கு காரணம் என்ன?

மருத்துவர் சரவணன்  : 13 இடைத்தேர்தல் வேட்பாளர்களில் 12 பேருக்கு சீட் வழங்கப்பட்டது எனக்கு ஒருவருக்கு மட்டும் மறுக்கப்பட்டது .இதற்கு காரணம் மதுரையில் உள்ள குறிப்பிட்ட மாவட்ட செயலாளர்களின் வேலை தான் காரணம். கம்யூனிஸ்ட் கேட்காத திருப்பரங்குன்றம் தொகுதியை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர்.ஸ்டாலின் என்னை அரவணைத்து சென்ற நிலையிலும், என்னைப் பற்றி தவறான தகவல்களை மாவட்ட செயலாளர்கள் தெரிவித்து வந்தனர்.நான் பாஜகவில் இணைந்த உடன் எனக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து சொன்னவர்களில் திமுக நண்பர்களே அதிகம்.

செய்தியாளர் :  உங்களுக்கு சீட் கிடைக்கும் முன்னரே பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனரே...?

மருத்துவர் சரவணன்  : உத்தேச பட்டியலை வைத்து வேட்பாளர் இவர்தான் என தொண்டர்கள் முடிவு செய்திருந்தார்கள்.அதனால் அந்த குழப்பம் ஏற்பட்டது. ஆனால், நான் வந்தது தெரிந்தவுடன் எனக்கு இப்போது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

செய்தியாளர் :  மாஜி எம் எல் ஏக்கள், மந்திரிகள், மாவட்ட செயலாளர்கள் பலருக்கும் சீட் மறுக்கப்பட்டு அவர்கள் வெளியே போகவில்லை, இவர் வேறு எதையோ எதிர்பார்த்து சென்றுள்ளார் என திகுக எம்.எல்.ஏ மூர்த்தி தெரிவித்து உள்ளாரே...?

மருத்துவர் சரவணன்  : மூர்த்தி எதையும் எதிர்பார்க்காமல் திமுகவில் இருக்கிறார் போல. அவர் எதற்காக இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும்.என்னைவிட தகுதியான வேட்பாளர்கள் யாரும் மதுரையில் நிறுத்தப்படவில்லை எனதிமுக தொண்டர்களே பேசுவதை கேட்க முடிகிறது.
Published by:Vijay R
First published: