யாரை எல்லாம் தோற்கடிக்க நினைக்கிறானோ அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்கிறேன் - மு.க.ஸ்டாலின்

யாரை எல்லாம் தோற்கடிக்க நினைக்கிறானோ அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்கிறேன் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் பழனிச்சாமி இஸ்லாமியருக்கு செய்த இரட்டை துரோகம் என தெரிவித்தார்.

 • Share this:
  யார் யார் எல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அந்த இடத்திற்கு எல்லாம் நானே நேரில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக "நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. திமுக சிறுபான்மையினர் அணி சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

  மேலும் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  கருத்தரங்கில் திமுகவின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவின் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்கள் மற்றும் மாநில அமைப்பாளர்கள், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

  ஜவஹிருல்லா;

  நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசிய போது,சி.ஏ.ஏ.சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக எங்கே தென் இந்தியாவில் சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து, கூட்டணி கட்சிகளை வைத்து பேரணி நடத்திய மு.க.ஸ்டாலின் எங்கே என் கேள்வியெழுப்பினார்

  என்.பி.ஆர் சட்டத்தை எதிர்த்து 2கோடி கையெழுத்தை களத்தில் இறங்கி பெற்றுத்தந்தவர் மு.க.ஸ்டாலின் என்றும் அதை ஆதரித்தவர் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி என தெரிவித்தார். சி.ஏ.ஏ சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்ததா இல்லை எதிர்த்து வாக்களித்ததா என்று கூட தெரியாதவர் பழனிச்சாமி என குற்றஞ்சாட்டினார்

  சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும், தமிழர் உரிமைகளுக்கும் மத்திய அரசு அச்சுறுத்தலாக உள்ளது மத்திய அரசு. மாநில அரசு அதற்கு ஒத்து ஊதுகிறது என தெரிவித்தார். வேளான் சட்டம் விவசாயிகளை மட்டும் பாதிக்கும் விசயம் இல்லை. அனைத்து மக்களையும் பாதிக்கும் விசயம்தான் புதிய வேளான் சட்டம். முதலமைச்சர் பழனிச்சாமி வேளான் சட்டத்தை ஆதரித்துவிட்டுத்தான் ஊர் ஊராய் சுற்றிக்கொண்டு இருக்கிறார் என பேசினார்.

  மேலும்,தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதன்முதலில் இசுலாமியருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா என்றும் பாசிஸ்டுகளின் ஆட்சி வீழ்வதற்கான தொடக்கமாக தமிழகம் இருக்கும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று எதிர்வரிசையில் ஆளே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும் என ஜவஹிருல்லா பேசினார்.

  காதர் மொய்தீன்;

  அதனை தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர்,காதர் மொய்தீன்,
  தமிழக முஸ்லீம் சமுதாயம் இதயங்களில் ஸ்டாலின் அவர்களை ஏற்றி வைத்துள்ளது ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் வரை சமுதாயம் ஓயாது என்றும்சிறுபான்மை சமுதயாத்திற்கும் திமுகவிற்குமான உறவு தேர்தல் உறவல்ல கொள்கை ரீதியான உறவு உள்ளது என பேசினார்.

  மேலும், அமைச்சரவையில் எப்போதும் இடம் கொடுப்பவர் கலைஞர் அது போல் இனி வரும் காலங்களில் இருவர் அல்ல மூவர் கூட அமைச்சரவையில் இடம் பெறலாம். சிறுபான்மை மக்களின் பொற்காலம் திமுகவின் ஆட்சிகாலம் என்றும் தமிழ்நாட்டில் எல்லா தரப்பு மக்களும் வரக்கூடிய ஆட்சி திமுக ஆட்சியாக சூளுரைக்க வேண்டும் என தெரிவித்தார்

  சிறுபான்மை மக்களுக்கு தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் புதிதாக எதையும் செய்யவேண்டுமென்று சொல்லவில்லை கலைஞர் செய்ததையாவது செய்திருக்கலாம்.
  உருது மொழி அகாடமியை கிடப்பிலே போட்டு தவிடு பொடியாக்கிய பெருமை ஆளும் கட்சிக்கு உண்டு. சிறுபான்மை மக்களுக்கான சட்ட திட்டங்கள் வரவுள்ள திமுக ஆட்சியில் ஸ்டாலின் அவர்கள் செய்வார் காதர் மொய்தீன் பேசினார்.

  ஸ்டாலின்;

  இறுதியாக தலைமை உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
  சிறுபான்மை தலைவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைபட்டுள்ளேண், எண்ணிக்கையில் ஒன்றுமில்லை, எவ்வளவு இடம் என்பது முக்கியமில்லை, நாம் வென்று ஆட்சி அமைக்கப் போகிறோம். கருணாநிதியின் ஆட்சியை உடன் இருந்து பார்த்தவன், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்.

  பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்றி விட்டனர். தங்களது கொள்கைகள், சாதனைகளை சொல்லிக்கொள்ள முடியாதவர்கள்தான் ஆன்மீகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

  மேலும், அண்ணா - கருணாநிதி இணைப்பு பாலமாக இருந்தது இஸ்லாமிய விழா தான். கருணாநிதி வாழ்க்கையில் இணைத்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்றார்.
  இந்தியை ஆட்சி மொழியாக மற்ற கூடாது தமிழ் தான் இருக்க வேண்டும் என்று கூறியவர் காகிதே மில்லத் என பேசினார்.

  சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலே பாஜக அதிமுக தான், பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் அதிமுக ஆதரித்து இருக்கிறது, இது தான் அண்ணா வழியை பின்பற்றுவதா என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

  ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறினார் ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து யாருடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார் என கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சிறுபான்மையினரை பற்றி பேச அருகதை இல்லை, குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் பழனிச்சாமி இஸ்லாமியருக்கு செய்த இரட்டை துரோகம் என தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினருக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை அனைத்து மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஒரு மாதத்தை கடந்து விவசாயிகள் போரடி வருகிறார்கள், அவர்கள் என்ன சிறுபான்மையினரா என கேள்வியெழுப்பிய அவர், அனைத்து இனத்திற்கும் தான் துரோகம் செய்து இருக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.

  2 நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரின் 2 வயது பேத்திக்கு என்னை மன்னித்து விடு என்று மண்ணில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் விவசாயி அது வேதனையாக இருக்கிறது இந்த நிலைமைக்கு தள்ளி விட்டது இந்த அரசு என கூறினார்.

  யார் யார் எல்லாம் நான் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அந்த இடத்திற்கு எல்லாம் நானே நேரில் சென்று கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறேன் என்ற அவர், பேராசிரியர் பேசும் போது 7 இடத்தில் அதிமுக வெற்றி பெரும் என்று கூறியிருக்கிறார், அதையும் விட்டு வைக்க மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  Published by:Vijay R
  First published: