ஜெயலலிதாவின் பாவத்திற்கும், சசிகலாவின் துரோகத்திற்கும் பழனிசாமியை கடவுள் தண்டிப்பார் - கடவுள் நம்பிக்கையுடன் ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதாவின் பாவத்திற்கும், சசிகலாவின் துரோகத்திற்கும் பழனிசாமியை கடவுள் தண்டிப்பார் - கடவுள் நம்பிக்கையுடன் ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் கொலை, கொடநாடு கொலை, நீட் தேர்வு தற்கொலை போன்ற பாவங்களுக்கு எல்லாம் ஆண்டவன் உங்களுக்கு தண்டனை தருவார்.

 • Share this:
  ஜெயலலிதா மரணத்தை கண்டுப்பிடிக்காத பாவத்திற்கும் , சசிகலாவுக்கு செய்த துரோகத்துக்கும் முதல்வர் பழனிசாமியை கடவுள் தண்டிக்க போகிறார் என கடவுள் நம்பிக்கையுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையாற்றினார்.

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக வேட்பாளர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி, கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

  அப்போது அவர் பேசியது, பழனிசாமி தோல்வி பயம் காரணமாக ஏதோ உளறி வருகிறார். பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறார். ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை மனதில் வைத்து தான் வாரிசு அரசியல் குறித்து பழனிசாமி பேசி வருகிறார். வாரிசு அரசியல் குறித்து பேச அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று கூறியவர் எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அவரின் மனைவி ஜானகி முதல்வரானார்.

  எம்ஜிஆர்-உடன் நடித்த ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதா தோழி சசகலா பதவிக்கு வந்தார். அவரின் காலில் விழுந்த கும்பிட்ட பழனிசாமி முதல்வரானார். ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என்று முதல்வரே பேசி வருகிறார். விசாரணை ஆணையம் திமுகவிற்காக நோட்டீஸ் அனுப்பியது? ஓபிஎஸ்க்கு தான் அனுப்பியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நாட்டுக்கு தெரிவிப்போம்.

  எப்படி 13 வயதில் இந்தியை எதிர்த்து கலைஞர் போராட்டத்தில் ஈடுபட்டாரோ, அவரின் வழியில் 14 வயதில் இருந்தே நான் அரசியலில் இருந்து படிப்படியாக வளர்ந்தவன். நெருக்கடி நிலையில் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்த வினாடியே என்னை கைது செய்ய போலீஸார் வீட்டிற்கு வந்தனர். தலைவர் என்னை சிறைக்கு வாழ்த்தி வழி அனுப்பினார்.

  என்னை கடவுள் தண்டிப்பார் என பழனிசாமி கூறியுள்ளார். நான் எந்த பாவமும் செய்யவில்லை. என்னை கடவுள் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாவங்களை செய்தது எல்லாம் நீங்கள் கடவுள் தண்டிக்கிறாறோ, இல்லையோ மக்கள் உங்களை தண்டிப்பார். ஜெயலலிதா மரணத்திற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாதற்கும், பதவி கொடுத்த சசிகலாவுக்கும் துரோகம் செய்த பாவத்திற்கும் நிச்சயமாக கடவுள் தண்டனை தரப் போகிறார் என்று கடவுள் நம்பிக்கையுடன் கூறினார.மேலும் பொள்ளாட்சியில் 250 பெண்கள் பலாத்காரம், தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் கொலை, கொடநாடு கொலை, நீட் தேர்வு தற்கொலை போன்ற பாவங்களுக்கு எல்லாம் ஆண்டவன் உங்களுக்கு தண்டனை தருவார்.

  கடந்த தேர்தலில் அதிமுக கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் அறிவிப்பு செய்துள்ளனர் . மேலும் மானாமதுரையில 16 கிராமங்கள் பயன் பெறும் வகையில் நாட்டார் கால்வாய் திட்டம் செயல்படுத்தபடும் காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிவகங்கையில் வேளாண்கல்லூரி உருவாக்கப்படும் தேவகோட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கப்படும், காவரி கூட்டு குடிநீர் திட்டம் காரைக்குடி , சிங்கம்புனரி, இளையான்குடி ,சிவகங்கை க்கு நீட்டிக்கப்படும் என்று தொகுதி திட்டங்கள் குறித்து பேசினார் .
  Published by:Vijay R
  First published: