TN ASSEMBLY ELECTION 2021 MDMK CANDIDATES ANNOUNCED VJR
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
வைகோ
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Last Updated :
Share this:
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை தொடர்ந்து தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தற்போது மதிமுக போட்டியிடும் சட்டமன்ற வேட்டபாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக வேட்பாளர்கள் பெயர்
அரியலூர் - சின்னப்பா,
மதுராந்தகம் (தனி) - மல்லை சத்யா,
பல்லடம் - முத்து ரத்தினம்,
சாத்தூர் - ரகுராம்,
வாகதேவநல்லூர் (தனி) - சதன் திருமலைக்குமார்,
மதுரை தெற்கு - பூமிநாதன்