திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

காங்கிரஸ் தரப்பில் இருந்து இறுதியாக 35 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. திமுக தரப்பில் 18 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த 25ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில், திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோரும், காங்கிரஸ் தரப்பில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் தரப்பில் இருந்து இறுதியாக 35 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. திமுக தரப்பில் 18 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பணிகளை வேகப்படுத்தி உள்ளனர். கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீட்டு பணிகளை திமுக தொடங்கி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி உடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 25 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Published by:Vijay R
First published: