அதிமுக, பாஜக உடன் காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை தெரியுமா?

அதிமுக, பாஜக உடன் காங்கிரஸ் நேரடியாக மோதும் தொகுதிகள் எத்தனை தெரியுமா?

கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சி உடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக தற்போது இறுதி பட்டியலை அறிவித்துள்ளது.

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் அவை எந்த தொகுதிகள் என்று தற்போது அறிவிக்ப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி உடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக தற்போது இறுதி பட்டியலை அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்

    1. காரைக்குடி
    2.கோவை தெற்கு
    3.ஈரோடு கிழக்கு
    4.பொன்னேரி
    5.வேளச்சேரி
    6.தென்காசி
    7.விளவங்கோடு
    8.ஶ்ரீபெரும்புதூர்
    9.சோளிங்கர்.
    10.ஶ்ரீவைகுண்டம்
    11.வேலூர்
    12.ஓமலூர்
    13.உதகமண்டலம்
    14.விருத்தாசலம்
    15.அறந்தாங்கி
    16.உடுமலைப்பேட்டை
    17.கள்ளக்குறிச்சி
    18.திருவாடனை
    19.கிள்ளியூர்
    20.நாங்குநேரி
    21.குளச்சல்
    22.சேலம்
    23.ஊத்தங்கரை
    24.மேலூர்
    25.மயிலாடுதுறை

    சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுகளில் 14 தொகுதிகளில் அதிமுகவுடனும், 5 தொகுதிகளில் பா.ஜ.க. உடனும், 4 தொகுதிகளில் பா.ம.க. உடனும் மோதுகிறது. ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published: