தேர்தலை வெற்றியும் பெறாமல் தோல்வியும் அடையாமல் தேர்தலைத் திருடுவதுதான் பாஜக யுக்தி- ப.சிதம்பரம் தாக்கு

தேர்தலை வெற்றியும் பெறாமல் தோல்வியும் அடையாமல் தேர்தலைத் திருடுவதுதான் பாஜக யுக்தி- ப.சிதம்பரம் தாக்கு

ப.சிதம்பரம்

மக்கள், யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர்களை விலை கொடுத்து வாங்குவது தான், பாஜகவின் வேலை

 • Share this:
  தேர்தலில் 3-வது அணி அமைக்கும் அனைவருமே பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள்தான் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் வாக்குச்சாவடி கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறும்போது, “மாணவர்களுக்கு தேர்வு வைத்து, தேர்ச்சி அறிவிப்பது தான் முறை.ஏப்ரலுக்கு பின் தேர்வு வைத்திருக்கலாம். அ.தி.மு.க., வெற்று பேச்சு அரசு.

  இதற்கு பின்னணி குரல் தருவது பிரதமரும், உள்துறை அமைச்சரும்.இவர்களை பற்றி, தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது. பாஜக இயக்கத்தை, தமிழக மக்கள், நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

  மக்கள், யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர்களை விலை கொடுத்து வாங்குவது தான், பாஜகவின் வேலை. தேர்தலில் வெற்றியும் பெறாமல், தோல்வியும் அடையாமல், தேர்தலை திருடுவது பாஜகவின் யுக்தி. மூன்றாவது அணி அமைக்கும் அனைவரையும், பா.ஜ.,விற்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகத் தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

  தமிழகச் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது, மார்ச் 12 முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

  இதற்கிடையே திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்றும் 5 தொகுதிகள் கேட்டிருக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகதீன் தெரிவித்துள்ளார்.

  திமுக மொத்தம் 178 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது, 56 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவினர் உடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல் சமது , பொருளார் சபிபுல்லா கான் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  Published by:Muthukumar
  First published: