தேர்தலில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வருத்தம் ஏற்படுவது இயல்பானது தான் - முதல்வர் பழனிசாமி

தேர்தலில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வருத்தம் ஏற்படுவது இயல்பானது தான் - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பாக ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 • Share this:
  தேர்தலில் சீட் கிடைக்காமல் போனால் வருத்தப்படும் நிகழ்வு அனைத்து கட்சிகளிலும் நடக்கும் ஒன்றுதான் தான் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

  சேலம் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி, ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குவதற்கு முன்பாக ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அதிமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கூறினார். தேமுதிக-விற்கு அரசியல் பக்குவாமில்லை என்றும் கூட்டணியில் இருந்து விலகிய பின் பேசுவது தவறு என்றும் கூறினார்.

  மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, அறிக்கையை முழுமையாக படித்த பிறகே கருத்து கூற முடியும் என தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: