தரிசன கட்டணம் ரத்து... ஹிந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் - பா.ஜ.க தேர்தல் அறிக்கை

ராமநாதசுவாமி திருக்கோயில்

கோவில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், மனைக்கட்டுகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சம்பந்தப்பட்ட ஆலயங்களிடம் ஒப்படைக்கப்படும்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னையில் வெளியிட்டார். தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் ஹிந்து கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஹிந்துக் கோயில்களுக்கு தனி வாரியம்

  • மதச் சார்பற்ற அரசு, ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, மறைந்த தவத்திரு.குன்றக்குடி அடிகளார் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின்படி. ஹிந்துக்கோவில்களின் நிர்வாகம், ஹிந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

  • 12.02.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை ஹிந்து ஆலயங்கள் நிர்வாகம் சம்பந்தமான வழக்கில் பிறப்பித்துள்ள தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்படும்.

  • ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் பட்டயக் கணக்காயர் மூலம் தணிக்கை செய்யப்படும். தணிக்கை ஆட்சேபணைகள் மூன்று மாதத்திற்குள் சரி செய்யப்படும்.

  • ஆழ்வார்கள், நாயன்மார்கள் அவதாரத் திருநாள் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றில் மட்டும் ஆலயங்களில் சமபந்தி போஜனம் நடத்தப்படும்.

  • கோவில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், மனைக்கட்டுகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சம்பந்தப்பட்ட ஆலயங்களிடம் ஒப்படைக்கப்படும்.

  • கோவில்களில் தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.

  • தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் அமைந்துள்ள பழநியில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவப்படும்.

  • ஆகம விதிகள் கற்பிப்பதற்கும், ஆராய்ச்சிகள் செய்வதற்கும் தனிப் பல்கலைக்கழகம் துவங்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: