• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • பஞ்சமி நிலம் மீட்பு, ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் - பாஜக தேர்தல் அறிக்கை

பஞ்சமி நிலம் மீட்பு, ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் - பாஜக தேர்தல் அறிக்கை

பட்டியலின சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்பணித்து கொண்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள் “தாழ்ததப்பட்டோர் உரிமை காக்கும் நாள்“ என அரசின் சார்பில் கடைபிடிக்கப்படும்.

  • Share this:
    தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பழங்குடியினவர்களிடம் ஒப்படைக்கப்படும், ஆதி திராவிடர் நலத்துறை என்பது இனிமேல் “பட்டியலின மக்கள் நல்வாழ்வுத் துறை“ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னையில் வெளியிட்டார். தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது. அதில், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சென்னை 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படும். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலினத்தவர்களிடம் கொடுக்கப்படும். 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆதி திராவிடர் நலத்துறை என்பது இனிமேல் “பட்டியலின மக்கள் நல்வாழ்வுத் துறை“ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். பட்டியலின சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்பணித்து கொண்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள் “தாழ்ததப்பட்டோர் உரிமை காக்கும் நாள்“ என அரசின் சார்பில் கடைபிடிக்கப்படும். பட்டியலின மக்களில் மிகவும் பின் தங்கிள்ள அருந்ததியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அருந்ததியர் நல வாரியம் அமைக்கப்படும்.

    படுகர் இன மக்களின் நீண்டகால கோரிக்கையான தங்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள் நிறைவேற்றப்படும். தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும். தற்போது இடஒதுக்கீட்டுச் சலுகை பெறாத மதத்தினர் உட்பட 67 பிரிவனரும் பயன்பெறும் வண்ணம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: