சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிப்பு: கூவம் ஆற்றில் போக்குவரத்து...- பாஜக தேர்தல் அறிக்கை

சென்னை மாநகராட்சி

சென்னையில் ஓடும் கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டு நீர்வழி போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் சீரமைக்கப்படும்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னையில் வெளியிட்டார். தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் தமிழ் வளர்ச்சி, கூவம் ஆறு சுத்தகரிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது.

  சென்னை மாநகராட்சி

  தலைநகர் டெல்லியில் உள்ளது போல் சென்னை மாநகராட்சியும் மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்படும். சென்னையில் ஓடும் கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டு நீர்வழி போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் சீரமைக்கப்படும்.

  தமிழ் வளர்ச்சி

  1,330 திருக்குறளையும் விளக்கங்களுடன் கல்வெட்டில் பதித்து திருக்குறள் மாமலை பூங்கா உருவாக்கப்படும்.

  ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் மலையப்பாளையத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரே கல்லால் ஆன மலையில் திருக்குறள் கல்வெட்டுப் பூங்கா அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

  உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்படும்.

  உலக முழுவதிலுமுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மொழிக்கான இருக்கைகள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: