சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா விவகாரம்... அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு

சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா விவகாரம்... அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு

சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்துடன் 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

 • Share this:
  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் தங்கு தடையில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக சார்பில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் கசாலி போட்டியிடுகிறார் இந்த நிலையில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக உள்ள ஜெ.எம் பஷீர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

  சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்துடன் 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி தானா என உறுதி செய்து கொண்ட பின்னரே அங்கு உள்ள பெண் வாக்காளர்களுக்கு ஜெ.எம் பஷீர் பணம் வழங்குகிறார்.
  Published by:Vijay R
  First published: