TMC MLAS ASSETS GREW BY 1985 PERCENT IN 5 YRS ADR ARU
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 1985% உயர்வு!
திரிணாமுல் காங்கிரஸ்
ஜெயநகர் தொகுதி எம்.எல்.ஏ பிஸ்வநாத் தாஸின் சொத்து மதிப்பு கடந்த முறை 46,85,523 ரூபாயாக இருந்தது எனவும் தற்போது 14,41,200 ரூபாயாக குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜோட்ஸ்னா மண்டி என்பவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 1985% உயர்ந்திருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேற்குவங்கத்தில் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 30 பேரின் வேட்பு மனுக்களில் இடபெற்றிருந்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்துடன் மேற்குவங்க தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து ஆராய்ந்து இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேற்குவங்கத்தின் பன்குரா மாவட்டத்தில் உள்ள ரனிபந்த் (ST) தொகுதியில் போட்டியிடும் ஜோட்ஸ்னா மண்டியின் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 1,96,633 ரூபாயாக இருந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தற்போது அவருடைய சொத்து மதிப்பு 41,01,144 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதாவது 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பில் ரூ. 39,04,511 லட்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1985% வளர்ச்சியாகும்.
கடந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் புருலியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதிப் குமார் முகர்ஜி இந்த முறை பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2016 தேர்தலில் அவருடைய சொத்து மதிப்பு 11,57,945 ரூபாய் என கூறியுள்ளார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு 45,02,782 ரூபாய் என தெரிவித்துள்ளார். இது 288.86% வளர்ச்சியாகும்.
இதே போல பஸ்சிம் மெதின்பூர் மாவட்டத்தில் உள்ள கேஸியாரி தொகுதியின் எம்.எல்.ஏவான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரேஷ் முர்முவின் சொத்து மதிப்பு 246.34% வளர்ந்துள்ளதால ஏடிஆர் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஜெயநகர் தொகுதி எம்.எல்.ஏ பிஸ்வநாத் தாஸின் சொத்து மதிப்பு கடந்த முறை 46,85,523 ரூபாயாக இருந்தது எனவும் தற்போது 14,41,200 ரூபாயாக குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.