பூத்களில் வெடிக்கும் மோதல்கள் - ஹெல்மெட் அணிந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்

பூத்களில் வெடிக்கும் மோதல்கள் - ஹெல்மெட் அணிந்து வந்த திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்

ரவீந்திரநாத் கோஷ்

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர் ஆன்ந்தா பர்மர் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Share this:
    மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்காம் கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. மேற்கு வங்க தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்து வருகிறது. பா.ஜ.க வெளிமாநிலத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்து இங்கு அராஜகத்தில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார்.

    கூச் பெகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சுமார் 8 மணியளவில் சித்தால்குச்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மோதல் வெடித்தது. மத்திய பாதுகாப்புப் படையினர் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் மீது குண்டு பாயந்தது. இந்த சம்பவத்தில் 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர் ஆன்ந்தா பர்மர் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூச் பெகர் மாவட்டத்தில் உள்ள நடால்பாரி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ரவீந்திரநாத் கோஷ்  களமிறங்கியுள்ளார். வாக்காளர்களையே தாக்குகிறார்கள் வேட்பாளரை விடுவார்கள் என்ற அச்சத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ரவீந்திரநாத் கோஷ் ஹெல்மெட் அணிந்தபடி வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். வேட்பாளர் ஹெல்மெட் அணிந்து நடந்து வருவதை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.  ‘தேவையற்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக நான் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளேன் என செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    பா.ஜ.க.வினர் சீத்தல்குச்சி, நடால்பாரி, துஃபன்கஞ்ச் மற்றும் தின்ஹட்டா பகுதியில் உள்ள பூத்களின் வெளியே நின்று கொண்டு எங்களுடைய கட்சி ஏஜெண்டுகளை உள்ளே வரவிடாமல் தடுக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published: