திமுகவை விலக்க வேண்டும் என்றால் அதிமுகவில் சசிகலா உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 51-வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை தோற்கடிப்பதே நமது கடமை என்று கூறினார்.
தமிழகத்தில் திமுகவை வளரவே விடக்கூடாது எனவும் தெரிவித்தார். வீடு பற்றி எரியும் போது கங்கை நீருக்கு காத்திருக்க கூடாது எனக் கூறிய அவர், திமுகவை விலக்க வேண்டும் என்றால் சசிகலா உள்ளிட்டோர் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்று சூசகமாக கூறினார்.