திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத்தை தி.மு.க தக்க வைக்குமா? சுயேட்சைகள் உதவியுடன் நெருக்கடி கொடுக்கும் அ.தி.மு.க

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத்தை தி.மு.க தக்க வைக்குமா? சுயேட்சைகள் உதவியுடன் நெருக்கடி கொடுக்கும் அ.தி.மு.க

தி.மு.கவைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேரும், தேமுதிக உறுப்பினர் ஒருவரும் அ.தி.மு.கவிற்கு தங்களுடய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தி.மு.கவைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேரும், தேமுதிக உறுப்பினர் ஒருவரும் அ.தி.மு.கவிற்கு தங்களுடய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியக் கவுன்சில் உறுப்பினர்களாக தி.மு.கவைச் சேர்ந்த 8 பேர், அ.தி.மு.கவைச் சேர்ந்த 3 பேர், சுயேட்சைகளாக 3 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர்  மக்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரும்பான்மையான தி.மு.கவைச் சேர்ந்தவர்களான சத்யா திருவரம்பூர் ஒன்றியக் கவுன்சில் தலைவராகவும், சண்முகம் ஒன்றியக் கவுன்சில் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது தி.மு.கவைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேரும், தேமுதிக உறுப்பினர் ஒருவரும் அ.தி.மு.கவிற்கு தங்களுடய ஆதரவை தெரிவித்துள்ளனர். இவர்கள் அணி மாறியதால் அ.தி.மு.க - தி.மு.க இடையே தலா 8 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சமபலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய குழு, தலைவர் சத்தியா லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய ஆணையர் பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் சித்ரா, வினோதினி, காயத்திரி அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்கள் 8 பேர் கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்ட அரங்கத்திற்கு செல்லாமல் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு விட்டு, கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

ஒன்றியப் பெருந்தலைவர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார். ஆதரவு கவுன்சிலர்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார். நலத்திட்டங்கள் குறித்தும் எங்களுக்கு சொல்வதில்லை. மேலும் தலைவர் பெரும்பான்மையை இழந்து விட்டார். ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான மனுவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளிக்க உள்ளோம் என்றும் அ.தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆதரவு கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் சத்தியா லோகநாதன், கவுன்சிலர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. திருவெறும்பூர் ஒன்றியத்தில் திமுகவிற்கே பெரும்பான்மை உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் எதிர்கொள்வோம் என்றார். மேலும், திருச்சி மாவட்ட ஊராட்சிக் கவுன்சில் மற்றும் 14 ஒன்றியக் கவுன்சில்களின் தலைவர்களாக திமுகவினரே தற்போது உள்ளனர். இந்நிலையில் திருவெறும்பூர்  ஒன்றியத்தை திமுக தக்க வைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: