முன்னாள் தமிழகக் காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர் வருகிற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
1977-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டவர் திருநாவுக்கரசர். எம்.ஏ.,பி.எல்., படிப்பை நிறைவு செய்து வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த திருநாவுக்கரசரை அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னிறுத்தினார் எம்.ஜி.ஆர்.
தன்னுடைய 27-ம் வயதிலேயே தமிழக சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் பொறுப்பை அடைந்தார். 1980 முதல் 1987 வரையில் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் தொழிற்சாலை, வீட்டுவசதி வாரியம், கைத்தறி உள்ளடக்கிய துறையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் புதுக்கோட்டை தொகுதியிலிருந்து எம்.பி ஆக வெற்றிப் பெற்ற திருநாவுக்கரசர் கப்பல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த 2002-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்த திருநாவுக்கரசர் ராஜ்ய சபா எம்.பி ஆகப் பதவி ஏற்றார். 2009-ம் ஆண்டு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றவர் அடுத்ததாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது வரையில் செயலாற்றி வருகிறார்.
மேலும் பார்க்க: மோடி என முழங்குவோரை உதைக்க வேண்டும் - எம்எல்ஏ பேச்சால் கடும் சர்ச்சை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery Delta Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Tiruchirappalli S22p24