தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார்.
துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தான் ரவீந்திரநாத் குமார். இவர் கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன் பின்னர் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் எம்.பி.ஏ மனிதவள மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
2009-ம் ஆண்டு முதல் அதிமுக இளைஞர் அணியின் மாவட்டச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார் ரவிந்திரநாத் குமார். தற்போது
தேனி தொகுதியிலிருந்து போட்டியிடும் இவர் தந்தை ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்து வருகிறார்.
மேலும் பார்க்க:
ஓட்டுக்கு பணம் கொடுத்தும் தோற்றுவிட்டோம்... ஒப்புக்கொண்ட திமுக நிர்வாகி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.