பயமா எனக்கா.... அந்த வார்த்தை என் டிக்ஸ்னரிலயே இல்ல - குஷ்பு அதிரடி

குஷ்பு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியின் பா.ஜ.க பொறுப்பாளராக நான் இருந்தேன். அதன் அடிப்படையில் அந்த தொகுதியை வலுவாக்க என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதனை நான் செய்தேன்.

 • Share this:
  சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக குஷ்பு களம் காண்கிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி பா.ஜ.க பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குஷ்பு அங்கு சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பா.ஜ.க சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேனியில் குஷ்பு களமிறங்குவார் என பேசப்பட்டது. அ.தி.மு.க கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி கூட்டணி கட்சியான பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜ.கவுக்கு ஆயிரம்விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.

  2016 சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம் . இவர் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டார். பா.ஜ.கவில் இணையும் போதே ஆயிரம்விளக்கு தொகுதி எனக்கே ஒதுக்க வேண்டும் என்ற கண்டிஷனோடுதான் சென்றுள்ளார். இதன்காரணமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க.செல்வம் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

  பா.ஜ.க தலைமையோ குஷ்புவை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்தது. கொஞ்சம் கூட தாமதிக்காமல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார் குஷ்பு. முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுவது பயமாக இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, “பயம் அப்படிங்கிற வார்த்தைக்கு என் டிக்ஸ்னரிலயே இடம் இல்லங்க. தயக்கம் எதும் இல்லை. ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும்போது மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடும். இந்தப்போட்டியில் நான்தான் முதலிடத்தில் வரவேண்டும். அதுக்காக எப்படி உழைக்க வேண்டும். என்ன பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்கள் இருக்கும்.

  குஷ்பு


  நான் பாடுபட தயாராக இருக்கேன். உழைப்பதற்கு நான் எப்போதுமே தயாராக இருக்கேன். நிச்சயமாக நான் வெற்றி கொடியை நோக்கி சென்றுவிடுவேன். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியின் பா.ஜ.க பொறுப்பாளராக நான் இருந்தேன். அதன் அடிப்படையில் அந்த தொகுதியை வலுவாக்க என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதனை நான் செய்தேன். சேப்பாக்கம் தொகுதியில் என்னை நிறுத்துவதாக யாரும் அறிவிக்கவும் இல்லை. நானும் அதுகுறித்து பேசியதும் இல்லை. சேப்பாக்கம் மக்களுடன் எனக்கு இருக்கும் பழக்கம் அப்படியே விடுப்படாது. ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் தொகுதி இரண்டும் பக்கத்தில்தான் இருக்கிறது’ என்றார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: