கொல்கத்தாவில் இடதுசாரி-காங்கிரஸ்- இந்திய செக்யூலர் கட்சி பேரணி: லட்சக்கணக்கானோர்  திரண்ட மாபெரும் கூட்டம்- மேற்கு வங்கத்தில் ட்ரெண்ட் மாறுகிறதா?

கொல்கத்தாவில் இடதுசாரி-காங்கிரஸ்- இந்திய செக்யூலர் கட்சி பேரணி: லட்சக்கணக்கானோர்  திரண்ட மாபெரும் கூட்டம்- மேற்கு வங்கத்தில் ட்ரெண்ட் மாறுகிறதா?

காங். இடதுசாரி ஐஎஸ்எஃப் பேரணிக்கு திரண்ட பெருங்கூட்டம்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி அலை, மத்தியில் ஆளும் பாஜக-வின் இந்துத்துவா அரசியல் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கொல்கத்தாவில் காங்கிரஸ்-இடதுசாரி-இந்தியன் செக்யூலர் பிரண்ட் கட்சிப் பேரணிக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரண்டது.

 • Share this:
  ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி அலை, மத்தியில் ஆளும் பாஜக-வின் இந்துத்துவா அரசியல் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கொல்கத்தாவில் காங்கிரஸ்-இடதுசாரி-இந்தியன் செக்யூலர் பிரண்ட் கட்சிப் பேரணிக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டம் திரண்டது.

  மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது, எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க மம்தா அரசும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் போட்டாப் போட்டியில் ஒருபுறம் இறங்க, கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் மற்றும் புதிதாக உதயமான ஐஎஸ்எப் கட்சிக்கு பெரும் கூட்டம் சேர்ந்தது அங்கு மாற்றத்துக்கான அறிகுறிகளாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

  கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் இவர்கள் பிரச்சாரக்கூட்டத்துக்கு கண்ணுக்கெட்டிய துரம் வரையிலும் மனிதத் தலைகளாகத் தெரிந்தன. இடது சாரி கூட்டங்கள் வழக்கமாக நடைபெறும் புகழ்பெற்ற மைதானமாகும் இது.

  மேடையில் “நாங்கள்தான் மாற்று, நாங்கள்தான் மதச்சார்பின்மை, நாங்கள்தான் எதிர்காலம்” என்று வங்க மொழியில் எழுதப்பட்ட வாசகத்துடன் கூடிய பேனர் காணப்பட்டது.

  லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு இதை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றியுள்ளனர். இடது சாரித் தலைவர் பிமன் பாசு, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரி இதற்கு முன்னால் இப்படிப்பட்டக் கூட்டத்தைக் கண்டதில்லை என்றார். ஆனால் இந்தப் பெருங்கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

  ஆனால் இந்தக் கூட்டம் பாஜக, திரிணாமுல் கட்சிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்று இடதுசாரிகள் கருதுகின்றனர்.

  பிப்ரவரி 3, 2019-லும் இதே போல் ஒரு பெரிய கூட்டம் திரண்டது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியா கலந்து கொண்டார், தேவலினா ஹேம்புரோம் பொறிபறக்கும் உரையை நிகழ்த்தினார்.

  இந்த இடதுசாரி, காங்கிரஸ், ஐஎஸ்எஃப் கூட்டணி பேரணிக்குத் திரண்ட கூட்டத்தினால் அரசியல் வல்லுநர்கள் தங்கள் கணக்கீட்டை வேறு மாதிரி செய்து வருகின்றனர்.

  கடந்த சட்டசபை தேர்தலில் இடது முன்னணி 26% வாக்குகளைப் பெற்றது. இதே விகிதம் 2019 லோக்சபா தேர்தலில் 7.52% ஆகக் குறைந்தது. அப்போது இடதுசாரி வாக்குகள் பாஜகவுக்குச் சென்றதாக தேர்தல் வல்லுநர்கள் கூறினர்.

  கடந்த முறையும் இப்படி பெரிய கூட்டம் சேர்ந்தது ஆனால் 7.52% தான் வாக்குகள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

  ஆனாலும் இந்த மாதிரி கூட்டம் சேர்வது மக்கள் கவனத்தை ஈர்க்கவே செய்யும் என்று திரிணாமுல் அமைச்சரே கூறுகிறார்.

  முன்னாள் சிபிஎம் எம்.பி. ஷாமிக் லாஹிரி கூறும்போது, “லோக்சபா தேர்தலில் பாலகோட்-புல்வாமா அதிகம் தாக்கம் செலுத்தியது. பாஜக ஆட்சிக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஆனால் அதன் பிறகு பீகாரில் பாஜகவின் வெற்றி ஒரு வெற்றியே அல்ல. இந்த முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.570லிருந்து ரூ.825 ஆனது எப்படி என்பதற்கு பாஜக இந்த முறை பதில் சொல்லியே ஆக வேண்டும். மாநிலத்தில் ஏன் ஒரு தொழிற்சாலை கூட இல்லை என்பதற்கு மம்தா பதில் சொல்லியாக வேண்டும்” என்கிறார்.

  இந்தப் பேரணி காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணிக்கு பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது என்பதில் இருவேறு கருத்தில்லை.
  Published by:Muthukumar
  First published: