‘ராசியான மாவட்டம்’: நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர்

‘ராசியான மாவட்டம்’: நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர்

எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது நாமக்கல் ராசியான மாவட்டம் என்று கூறினார்.

  • Share this:
    தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர் நாமக்கல் ராசியான மாவட்டம் என்று கூறினார்.

    மாவட்ட எல்லையான ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் நாமக்கல்  மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி சரோஜா உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

    அப்போது பேசிய முதலமைச்சர், எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி என்னுடைய ஆட்சிக்காலத்திலும் நாமக்கல் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்றார். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை அறிந்து பொங்கல் 2500 ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அறிவித்தேன்.

    எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வழங்குவதாக ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த திட்டம் நிறைவேற்றி விட்டால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே பொய்யான அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின். அதிமுகவை பொறுத்தவரை கடந்த ஆண்டு குடும்ப அட்டை 1000 ரூபாய் வழங்கப்பட்டது அப்போது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கட்சிதான் திமுக. மக்களுக்கு நல்லது செய்வது திமுகவிற்கு பிடிக்காது மக்கள் இவரை இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் ஏழை எளிய மக்கள் வாழ வேண்டும் எல்லா வளங்களும் பெற்று வாழ வேண்டும் என எண்ணினார்கள் அந்த எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய அரசு அதிமுக என்று கூறிய முதலமைச்சர், பொதுமக்கள் எப்பொழுதும் அரசுக்கு துணையாக நிற்க வேண்டும் இந்த அரசுதான் ஏழை எளிய மக்களை காக்கக்கூடிய அரசு என்றும் கூறினார்.
    Published by:Suresh V
    First published: