”வேலூர்க்காரர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது வீலூர் ஆக்கிவிட்டார்கள்” - தங்கம் தென்னரசு விமர்சனம்

கொரோனா நோய்த்தொற்றில் தமிழகமே பற்றி எரியும் வேளையில் ஊர் பெயர்களை மாற்றி தமிழக அரசு ஆனந்தப்படுவதாக  திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

”வேலூர்க்காரர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது வீலூர் ஆக்கிவிட்டார்கள்” - தங்கம் தென்னரசு விமர்சனம்
தங்கம் தென்னரசு
  • Share this:

கொரோனா நோய்த்தொற்றில் தமிழகமே பற்றி எரியும் வேளையில் ஊர் பெயர்களை மாற்றி தமிழக அரசு ஆனந்தப்படுவதாக  திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.


“கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் ; கிழவியைத் தூக்கி மனையில் வை”இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தமிழக...

Posted by Thangam Thenarasu on Thursday, June 11, 2020
“கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் ; கிழவியைத் தூக்கி மனையில் வை”

இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தமிழக அரசுக்கு நிச்சயம் பொருந்தும்.

கொரொனா நோய்த்தொற்றில் தமிழகம் - குறிப்பாக சென்னை- பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைத் தடுக்க நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டிய தமிழ்நாடு அரசோ, இப்போதுதான் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.


சரி, இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால்,தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்தான் எத்தனைக் குழப்பங்கள்!

கோயம்புத்தூருக்கு “ Koyampuththoor” சரியாம். ஆனால், திருவில்லிபுத்தூருக்கு “Thiruvillipuththur” தான் சரியாம்!

“கிருட்டினகிரி மாவட்டம்” என்பது மாவட்டத் தலைப்பு. அப்படியானால் , ‘கிருஷ்ணகிரி’ என்ற ஊர்ப் பெயர் “ கிருட்டிணகிரி” என மாற்றப்பட்டுள்ளதா எனில், இல்லை! ஆனால் தருமபுரி மட்டும் “ Tharumapuri” ஆகிவிட்டது. தவிர, மாவட்டப் பெயரிலும் ‘ கிருட்டினகிரி’ எனத் தவறு.

இவ்வளவு மெனக்கெட்டு உச்சரிப்பை மாற்ற முனைந்தவர்கள், வேதாரண்யத்தைத் திருமறைக்காடு ( திருமரைக்காடு என்பதே சரி என்போரும் உண்டு) எனத் தமிழாக்கம் செய்ய முன்வந்திருந்தால் பாராட்டி இருக்கலாம். மாறாக அது “ Vetharanyam” மட்டுமே. அதிலும் பாவம் ; மற்ற ஊர்களுக்கு எல்லாம் கிடைத்த மாதிரி “ vethaa” என்று வாய்க்கவில்லை.

அய்யாக்கமாரே!

ஒன்று எழுத்துகளுக்கான பன்னாட்டு ஒலிப்பு நெறிகளைக் கடைபிடியுங்கள். இல்லை என்றால், கலெக்டர் சார் சொல்றதை “ கம்முனு” கேட்டுக்கோங்க. ஒவ்வொரு ஊருக்கும் உங்களுக்குத் தோணியது போலச் சொல்லாதீங்க.

ஹ்ம்ம்ம்... என்னத்த சொல்றது?

இந்த வேலூர்க்காரர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது.

“Veeloor” ஆக்கி விட்டார்கள்! என்று பதிவிட்டு விமர்சித்துள்ளார்.


First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading