Home /News /politics /

`இறைவன் பழனிசாமிக்கு தைப்பூச அரசு விடுமுறை கொடுத்ததற்கு முதல்வர் பழனிசாமிக்கு நன்றி!’ - தமிழிசை சௌந்தர்ராஜன்

`இறைவன் பழனிசாமிக்கு தைப்பூச அரசு விடுமுறை கொடுத்ததற்கு முதல்வர் பழனிசாமிக்கு நன்றி!’ - தமிழிசை சௌந்தர்ராஜன்

கொரோனா தொற்றில் இருந்து விலகி அனைவரும் தடுப்பூசி பெற்று நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பழனி முருகனை பிரார்த்திக்க உள்ளேன்

    பழனிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வரை சந்தித்த போது தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்ததாக கூறியுள்ளார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``நான் அரசியல்வாதியாக வரவில்லை. கவர்னராக வந்திருக்கிறேன். அரசியல் பத்தி பேச முடியாது” என தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், ``இன்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு தற்போது மதுரைக்கு வந்துள்ளேன். இதனைத் தொடர்ந்து பழனி ஆண்டவரைப் பார்ப்பதற்காக மதுரை வந்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்தேன். அப்போது இறைவன் பழனிச்சாமிக்கு தைப்பூச அரசு விடுமுறை கொடுத்ததற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்தேன்” என்றார்.

    கொரோனா தொற்றில் இருந்து விலகி அனைவரும் தடுப்பூசி பெற்று நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பழனி முருகனை பிரார்த்திக்க உள்ளேன் என்றும் இன்று மாலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு பழனி ஆண்டவரை தரிசனம் செய்ய உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
    Published by:Ram Sankar
    First published:

    Tags: Cm edappadi palanisamy, Thaipusam

    அடுத்த செய்தி