நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைத்தவர்: ராமதாஸ் மீது வேல்முருகன் காட்டம்

நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைத்தவர்: ராமதாஸ் மீது வேல்முருகன் காட்டம்

தி.வேல்முருகன்

தமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்.

  • Share this:
    பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

    அவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன.

    ஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளது.

    தன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று ராமதாஸ் விமர்சித்து வந்தார்.

    அதை முதல்வரும் மறந்து விட்டு ராமதாஸ் உடன் சேர்கிறார். தமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்.

    இவ்வாறு கூறினார் வேல்முருகன்.

    முன்னதாக டாக்டர் ராமதாஸ் தமிழக பட்ஜெட்டை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், “‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் நலனுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மட்டும் ரூ.6,543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாசனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பாட்டாளி மக்கள் கட்சியால் வலியுறுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும், தாமிரபரணி - கருமேணியாறு இணைப்புத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாகவும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகும்.

    ரூ.12,110 கோடி மதிப்புள்ள கூட்டுறவு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைப் போக்கும் நோக்குடன் உடனடியாக ரூ.5,000 கோடி நிதி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

    என்று பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: