TAMILNADU GOVTS DEBT IS 4 LAKH CRORES IN LAST TEN YEARS SRS
தமிழக அரசின் கடன் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு!
தமிழக அரசு தலைமைச் செயலகம்
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் , கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் , கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.
சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இடைக்கால நிநிதிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார். புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடன் சுமையில் சிக்கியுள்ளது தமிழக அரசு. கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசின் கடன், 1,18,610 கோடியாக இருந்தது. இந்த கடன் தற்போது கடன் 4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது.
2016-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தபோது நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் 2016-17 ஆண்டு நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் அரசுக்கு 2,52 ,431 கோடி இருப்பதாக தெரிவித்தார். இந்த சூழலில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதி துறை கூடுதலாக வழங்கப்பட்டது. அப்போது 2017-18 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை ஜெயக்குமார் தாக்தல் செய்தார். இதில் 3,14,366 கோடி கடனில் அரசு மூழ்கியிருப்பது தெரியவந்தது.
இப்படியான சுழலில் மீண்டும் நிதி அமைச்சரான ஓபிஎஸ், 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையையில் அரசின் கடன் 3,55,844 கோடியாக பல மடங்கு உயர்ந்து இருந்தது. இதன் பின்பு ஓபிஎஸ் தாக்கல் செய்த, 2019-20 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாய் அரசு கடன் இருப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி வருவதாக எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் 2020-21 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அரசின் கடன் 4,56,660 கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இடைக்கால நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசின் கடன் சுமை குறித்து கடும் விமர்சனங்களை பேரவையில் முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.