வெளிநாட்டினரையும் ஈர்த்த தமிழக தேர்தல் பிரச்சாரம்... பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ரஜினி குறித்து அசத்தல் அப்டேட்

வெளிநாட்டினரையும் ஈர்த்த தமிழக  தேர்தல் பிரச்சாரம்... பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ரஜினி குறித்து அசத்தல் அப்டேட்

நார்வே நாட்டை சேர்ந்த தோர்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தொடங்கி விட்ட முக்கிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் வெளிநாட்டினரையும் ஈர்த்துள்ளது.

  • Share this:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும்,அதிமுக, திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பரப்புரையைத் தொடங்கி விட்டனர். அதிமுக, திமுக என இரண்டு அணிகள் தற்போது வரை உறுதியாகியுள்ளது. நடிகர் ரஜினியின் அரசியல் கட்சி தொடக்கம் இல்லை என்று உறுதிப்படத் தெரிவித்து விட்டார். கமல் மூன்றாவது அணி அமைப்பாரா? திமுக கூட்டணியில் சேருவாரா? என்பதும் உறுதியில்லை.

இந்நிலையில், திருச்சியில் கடந்த 27ம் தேதி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், 28, 29 தேதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.இன்றும் (30ம் தேதி) நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.

மேலும்,தேர்தல் தேதி வரும் மார்ச் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அண்மையில் கட்சிக் கூட்டத்தில் அறிவித்தார். தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கேற்ப கட்சிகளும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், பிரச்சாரக் கூட்டம், கூட்டணிக் கூட்டம் என்று கொரோனா காலத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. மாவட்ட, ஒன்றியம் வாரியாகவும் கட்சி அலுவலகங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன.

இந்நிலையில், தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டினர் மட்டுமல்ல வெளிநாட்டினரையும் ஈர்த்துள்ளது.ஆம், கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த சென்னையில் பணியாற்றும்  நார்வேயைச் சேர்ந்த பொறியாளரான தோர் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை கண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்களை சொல்கிறார். இப்போது கூட ஸ்டாலின் பையன் உதயநிதி பிரச்சாரம் செய்கிறார்.அதேநேரத்தில், நடிகர் ரஜினிக்காந்த் அருமையான நடிகர். அவருடைய சிவாஜி, கபாலி, பேட்ட படங்கள் ரொம்ப பிடிக்கும். அரசியலுக்கு வரவில்லைன்னு அவரின் ட்விட்டர் பார்த்தேன். அவர்  அருமையான நடிகர் என்று அப்டேட்டாக அதிரடிக்கிறார் தோர்.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இவை தமிழ்நாட்டினர் மட்டுமல்ல, வெளிநாட்டினரையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: