• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • பெண்களுக்கு அங்கீகாரமும், உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது திமுக - கே.எஸ்.அழகிரி

பெண்களுக்கு அங்கீகாரமும், உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது திமுக - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

பெண்களுக்கு அங்கீகாரமும், உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவை பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

  • Share this:
    கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதி தேர்நிலைதிடலில் மதசார்பற்ற ஜனநாயக முற்போற்கு கூட்டணி சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். கூட்டத்தில் முதலில் பேசிய கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் , கோவை தெற்கு தொகுதி எலைட்டான தொகுதியாக தெரிவதால் இங்கு இறக்குமதிகள் போட்டியிடுகின்றன என தெரிவித்தார்.

    ஆனால் இந்த தொகுதியில் என்ன பிரச்சினை என்பது எதிரில் இருக்கும் வேட்பாளர்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
    திரை நட்சத்திரம் என்ற தகுதியை வைத்து இந்த தொகுதியில் போட்டியிடும் கமல், இங்கு தோற்றால் அதே தகுதியை வைத்து அடுத்து வேறு ஊரில் வேறு தொகுதியில் போட்டியிடுவார்.

    நடிகர் நடிகராகவே போகட்டும. நடப்பது நடிகர் சங்க தேர்தல் அல்ல, சட்டமன்ற தேர்தல் என தெரிவித்தார். டெல்லியில் தேசிய தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன் நிச்சயம் கோவையில் இருக்க மாட்டார் என தெரிவித்த அவர், பா.ஜ.கவை மக்கள
    டெபாசிட் இழக்க செய்வார்கள் என மயூரா ஜெயக்குமார் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, இது ஒரு முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகின்றது என தெரிவித்தார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.ஆனால் மத்திய அரசு குறைக்கவில்லை. தவறான பொருளாதார கொள்கையில் இருந்து இந்தியாவையும், தமிழகத்தையும் மீட்கும் வாய்ப்பு நமக்கு இருக்கின்றது என தெரிவித்தார்.

    வேறு மாநிலத்தின் முதல்வர் கோவை வரும் போது எதற்கு கடைகள் அடைக்க வேண்டும், அந்த கடைகள் மீது எதற்கு கல் எறிய வேண்டும் என கூறிய அவர்,வன்முறையின் மூலம் வெறுப்பை விதைக்கவே பா.ஜ.க வினர் விரும்புகின்றனர் எனவும், காந்தி கொலைக்கு 60 வருடத்திற்கு பின்பும் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள், இதற்கு தமிழகம் அனுமதிக்காது என தெரிவித்தார்.

    தாராபுரம் வந்த பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்து பேசாமல் , மேடை பேச்சாளர் மாதிரி பேசுகின்றார் எனவும், பிரதமர் மேடைபேச்சாளர் மாதிரி பேசக்கூடாது என்பது மரபு என கூறிய அவர், திமுக காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு எதிரி என்பது போல பிரதமர் பேசியிருக்கின்றார் என தெரிவித்தார். உலகத்தின் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி என கூறிய அவர், இந்த கட்சியில்தான் 1925 ம் ஆண்டு முதன் முறையாக சரோஜினி நாயுடுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார் எனவும்,இந்திரா காந்தி, சோனியா காந்தி , பிரதீபா பாடீல் இப்படி பல பெண்கள் தலைமை பொறுப்பில் இருந்திருக்கின்றனர் .

    திமுக பெண்களை மதிப்பதில்லை என மோடி பேசுகின்றார், திராவிட இயக்கங்கள் பெண்கள் உரிமைக்காக ஏராளமான போராட்டம் நடத்தி இருக்கின்றனர், பெண்களுக்கு சொத்துரிமையை கொடுத்தது திமுக. ஜல்லிகட்டு தடைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு இருந்தாக பிரதமர் பேசி இருக்கிறார், ஆனால் பா.ஜ.க ஆட்சி அமைந்த பின்புதான் ஜல்லிகட்டு நடத்த முடியாமல் போனது எனவும் ஐல்லிகட்டு தடை செய்யப்பட்டதும் பா.ஜ.க ஆட்சியில்தான் என தெரிவித்த அவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த வரை ஜல்லிகட்டுக்கு தடை செய்யவில்லை என தெரிவித்தார்.

    நாளுக்கு நாள் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வலிமை கூடிக்கொண்டு இருக்கிறது எனவும்,இதனால் எதிரணியினர்
    விரக்தியின் விளிம்பில் இருப்பதால் கற்களை எறிகின்றனர் . கோவை தெற்கு தொகுதியில் மயூராவை தேர்வு செய்வதின் மூலம், திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் ஏராளமான திட்டங்களை கொண்டு வர முடியும். மயூரா ஜெயக்குமார் மட்டுமே இந்த தொகுதியில் இருப்பவர் எனவும், மின்மினி பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் பறந்து போகும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: