• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • Exclusive: கலைஞர் என்ற விலாசம் ஸ்டாலினுக்கு இருந்தது - எடப்பாடி பழனிசாமி

Exclusive: கலைஞர் என்ற விலாசம் ஸ்டாலினுக்கு இருந்தது - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

அரசியலில் இருந்தால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் சக்தி வேண்டுமென்று ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நியூஸ் 18 தமிழ் நடத்திய பிரத்யேக நேர்காணல்

    கேள்வி: தேர்தல் பரப்புரையில் தனிப்பட்ட முறையில் உங்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்.

    பதில்: கிராமத்தில் ஒன்று சொல்வார்கள். எந்த மரத்தில் கனிகள் பழுத்திருக்கிறதோ அந்த மரத்தில்தான் கல்லடிபடும்  என்று. எங்களுடைய அரசு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கள் மீது பொறாமைப்படும் எதிர்க்கட்சியினர் எங்களை குறை சொல்கிறார்கள். தமிழகம் முழுவதும் நான் இப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.எந்த இடத்திலும் அரசுக்கு எதிர்ப்பே கிடையாது.

    சாதாரண விவசாயி முதலமைச்சர் ஆகிவிட்டான். கட்சியில் உயர் பொறுப்பில் இருக்கிறான் என்ற எரிச்சலில் என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். அரசியலில் இருந்தால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி வேண்டுமென்று ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அதையெல்லாம் எண்ணிப்பார்த்து மக்களுக்கு சேவையாற்ற வந்திருக்கிறோம் எனவே அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படவேண்டும் என தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

    கேள்வி: சிறுதாவூர் தொடங்கி இப்போது வரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உங்கள் மீது நேரடியாக விமர்சனத்தை முன்வைக்கிறார் இதை எப்படி பார்க்கிறீர்கள்.

    பதில்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை தேர்ந்தெடுத்து தான் அரசியலில் வர முடியும். எனக்கு பெரிய பின்புலம் கிடையாது. ஆனால் அவருக்கு அப்படியல்ல. அவருடைய தந்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தார். தமிழகத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். அவருடைய மகன் ஸ்டாலின். அவருக்கு அந்த விசாலம் கிடைத்திருக்கிறது. அதனால் நேரடியாக உள்ளே நுழைந்துவிட்டார்.



    எங்களைப்போல சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர். கிளை கழகச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிறகு முதலமைச்சர் வந்துள்ளேன். அனுபவ ரீதியிலாக அனுபவித்தவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். கஷ்டம் இல்லாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள். அனுபவித்த எனக்கு அந்த கஷ்டம் என்னவென்று தெரியும். அது எனக்கு நன்றாகத் தெரியும் என்றார்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: