• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • பெண்கள் பற்றி இழிவாக பேசுபவர்களை தட்டிகேட்க ஸ்டாலினுக்கு திராணி இல்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பெண்கள் பற்றி இழிவாக பேசுபவர்களை தட்டிகேட்க ஸ்டாலினுக்கு திராணி இல்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பெண்களை இழிவாக பேசும் பேச்சாளர்களை தட்டிக்கேட்க திராணியில்லாத தலைவராக தான் ஸ்டாலின் இருக்கிறார்.

  • Share this:
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆயிரம் விளக்கு, திநகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக தலைவர் ஸ்டாலின் ஏதோ 234 தொகுதிகளிலும் ஜெயித்துவிட்டது போல் தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகிறார். 234 தொகுதிகளில் கனவில் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். நிஜத்தில் ஜெயிக்க முடியாது.

    சென்னையில் 5 வருடம் மேயராக இருந்துள்ளார். அப்போது இங்கு எந்தப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை. துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தார். உள்ளாட்சி துறை அமைச்சரிடத்தில் தான் அதிகாரம் உள்ளது. அவர் கையெழுத்திட்டால் தொகுதிக்கு நிதிஆதாரம் கிடைக்கும். அதனைக்கொண்டு பணிகளை செய்யலாம். சென்னை மக்கள் ஸ்டாலினுக்கு 10 ஆண்டுகள் தந்தனர். ஆனால் அவர் மக்களை கவனிக்கவில்லை. குடும்பத்தினரை கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இப்போது வந்து ஆட்சியை கொடுங்கள் என்கிறார்.

    பெண்களை இழிவாக பேசும் பேச்சாளர்களை தட்டிக்கேட்க திராணியில்லாத தலைவராக தான் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். கோயம்புத்தூரில் திமுக வேட்பாளருக்கு பரப்புரை மேற்கொண்ட லியோனி பெண்களை கொச்சைப்படுத்தி கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசினார். பெண்களின் இடுப்பு குறித்து பேசினார். இந்த பேச்சாளர்களை எல்லாம் தட்டிக்கேட்க திராணி இல்லாத தலைவர் ஸ்டாலின். இந்த தேர்தல் மூலம் மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அதிமுக இத்தேர்தலுடன் காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் அவதூறு பிரசாரத்தை தொடர்ந்து எல்லா கூட்டத்திலும் பரப்பி வருகிறார். மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் என்னை பற்றிதான் பேசிவருகிறார்.

    வியாபாரிகள் மகிழ்ச்சியோடு வியாபாரம் செய்துகொண்டிருக்கிறீர்கள். கட்டப் பஞ்சாயத்து தற்போது கிடையாது. அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் நிம்மதியாக தொழில் செய்துகொண்டிருக்கிறீர்கள். அது தொடரவேண்டும். இந்தியாவில் பல மாநகரங்கள் உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. நாம் எடுத்த நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு முதலிடம். திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட விருதுகளும் வாங்கியதில்லை. மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததும் கிடையாது” என விமர்சனம் செய்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: