திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அண்ணா அறிவாலயம்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

 • Share this:
  திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில் தொகுதி பங்கீட்டில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

  அதை தொடர்ந்து விசிக உடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு நிறைவடைந்து அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது.

  இந்நிலையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது . மேலும் இந்திய கம்னியூஸ்ட் கட்சி தரப்பில் 8 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், ஆலங்குடி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: