திமுக கூட்டணியில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்

திமுக - மார்க்ஸிட் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

 • Share this:
  திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருந்தது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

  திமுக - மார்க்ஸிட் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

  மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

  1.திருப்பரங்குன்றம்
  2.அரூர்
  3.கந்தவர்வகோட்டை
  4.திண்டுக்கல்
  5.கோவில்பட்டி
  6.கீழ்வேளூர்
  Published by:Vijay R
  First published: