தமிழக சட்டமன்ற தேர்தல் : காலை11 மணி நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் : காலை11 மணி நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவு

மாதிரி படம்

தமிழகத்தில்  தற்போது வைர அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச்சவாடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறும்.

  இதனிடையே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கொரோனா மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

  தமிழகத்தில்  தற்போது வைர அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  இதற்கு அடுத்தப்படியாக திண்டுக்கல்லில் 27.55 சதவீதமும் சென்னையில் 23.67 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: