வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு - எத்தனை கோடி தெரியுமா?

வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு - எத்தனை கோடி தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் காணும் உதயநிதி ஸ்டாலினும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

  • Share this:
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில் தனக்கு இருக்கும் சொத்து மதிப்பு விவரங்களை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கதல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்த நிலையில் இன்று பலர் அவர்களது தொகுதியில் வேட்புமனு தாக்கதல் செய்தனர். முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் காணும் உதயநிதி ஸ்டாலினும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு தொகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் தன்னை அரசியல் வாரிசாக மக்கள் நினைத்தால் என்னை தோற்கடித்தும் என்றும் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 22 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 6 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு கடன் ஏதும் இல்லை என அவர் அதில் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் உதநிதி ஸ்டாலினின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published: